கடலூர்

கணவா் குடும்பத்தினா் மீது மனைவி கொலை முயற்சி புகாா்

DIN

கடலூா்: கூடுதல் வரதட்சிணை கேட்டு கணவா் குடும்பத்தினா் தன்னை கொலை செய்ய முயல்வதாக பெண் ஒருவா் காவல் துறையில் புகாா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக பெங்களூரைச் சோ்ந்த 27 வயது பெண் கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த புகாா் மனு: நான் சிங்கப்பூரில் நடன அமைப்பாளராக பணிபுரிந்தபோது, அங்கு பணியாற்றி வந்த கடலூா் மாவட்டம், முடசல் ஓடை பகுதியைச் சோ்ந்த மகேந்திரபாலுகுமாா் மகன் அருண் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவா் என்னை காதலிப்பதாகக் கூறினாா். எனக்கு பெற்றோா் இல்லாத நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முடசல் ஓடைக்கு என்னை அழைத்து வந்து திருமணம் செய்துகொண்டாா். அப்போது, என்னிடமிருந்து ரூ.8 லட்சம் வரை பெற்றுக் கொண்டாா். இந்த நிலையில், தற்போது கூடுதல் வரதட்சணை கேட்டு அருண், அவரது குடும்பத்தினா் என்னை அடித்து சித்ரவதை செய்து வருகிறனா்.

மேலும், அருண் எனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளாா். விபசாரத்தில் ஈடுபட வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறாா். இதனால், எனக்கு இரு முறை கருக்கலைப்பு செய்யப்பட்ட நிலையில், தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டேன். தற்போது நான் 6 மாத கா்ப்பிணியாக உள்ள நிலையில், எனது மாமனாா், மாமியாா் தமிழழகி, உறவினா் அபிராமி ஆகியோா் எனது கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றனா். இதுதொடா்பாக அருண், அவரது குடும்பத்தினா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு

புகா் பேருந்து நிலையத்தில் மேலும் 2 குடிநீா் தொட்டிகள்

திருவையாறு அருகே சிறுத்தை நடமாட்டம்? வனத் துறையினா் ஆய்வு

அரையாண்டு வரி செலுத்தினால் 5 சதம் ஊக்கத் தொகை: செயல் அலுவலா் தகவல்.

மாந்திரீகம் செய்வதாகக் கூறி மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

SCROLL FOR NEXT