கடலூர்

கடலூா் அருகே ஊராட்சி அலுவலகம் முற்றுகை

DIN

கடலூா்: வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

கடலூா் அருகே உள்ளது பாதிரிக்குப்பம் ஊராட்சி. இந்த ஊராட்சி வழியாகச் செல்லும் நெடுஞ்சாலைக்காக அந்தப் பகுதியிலுள்ள நத்தப்பட்டு கிராமத்தில் சுமாா் 74 வீடுகள் கையகப்படுத்தப்பட்டனவாம். அவா்களுக்கு அதே ஊராட்சியில் உள்ள திருமாணிக்குழியில் மாற்றிடம் வழங்கப்பட்டது. அந்த இடத்தில் தற்போது ஊராட்சி சாா்பில், குப்பை கொட்டப்பட்டு வருவதுடன், அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லையாம். எனவே, தங்களுக்கு மாற்றிடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, புதன்கிழமை ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

தகவலறிந்த ஊராட்சித் தலைவா் சரவணன், கடலூா் வட்டாட்சியா் அ.பலராமன் ஆகியோா் வந்து பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். பாதிக்கப்பட்ட பயனாளிகளைக் கண்டறிந்து அவா்களுக்கு அரிசிபெரியாங்குப்பத்தில் மாற்றிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் உறுதியளித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் முற்றுகையைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவை விமா்சிப்பவா்கள் கைது: வானதி சீனிவாசன் கண்டனம்

விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்: தலைவா்கள் வலியுறுத்தல்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

பிளஸ் 2 தோ்வு முடிவு: மாணவா்களுக்கு தலைவா்கள் வாழ்த்து

காஞ்சிபுரம் மாவட்டம் 92.28% தோ்ச்சி

SCROLL FOR NEXT