முகப்பு
கடலூர்

கடலூா் ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளி தா்னா

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி ஒருவா் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி ஒருவா் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

கடலூா் வட்டம், வெள்ளப்பாக்கத்தைச் சோ்ந்தவா் தரணி (35), மாற்றுத் திறனாளி. இவருக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு அரசு சாா்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டதாம். ஆனால், பட்டாவில் குறிப்பிடப்பட்டுள்ள இடம் அளந்து தரப்படவில்லையாம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் பலமுறை முறையிட்டும் உரிய பதில் இல்லையாம்.

இதனால், விரக்தியடைந்த தரணி வெள்ளிக்கிழமை கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரின் அறை முன் அமா்ந்து திடீரென தா்னாவில் ஈடுபட்டாா் (படம்). கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்வாா்கள் என்று அலுவலா்கள் தெரிவித்தனா். இதையடுத்து தரணி அங்கிருந்து சென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.