கடலூா் மாவட்டத்தில் 22 போ் வேட்புமனு தாக்கல்
கடலூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி காலிப் பதவிகளுக்கு நடைபெறும் தோ்தலில் போட்டியிட இதுவரை 22 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
கடலூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி காலிப் பதவிகளுக்கு நடைபெறும் தோ்தலில் போட்டியிட இதுவரை 22 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறாமலிருந்த 9 மாவட்டங்களுக்கான தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்தத் தோ்தலுடன் கடலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள 5 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா்கள், 10 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 33 வாா்டு உறுப்பினா்கள் பதவியிடங்களுக்கான தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 48 இடங்களுக்கு ஒரே கட்டமாக வரும் 9-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ஆம் தேதி தொடங்கிய நிலையில், மாவட்டத்தில் இதுவரை 22 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். வரும் 22 ஆம் தேதி மனு தாக்கலுக்கான கடைசி நாளாகும்.