கடலூர்

சாலை விரிவாக்கத்துக்காக விதிகளை மீறி வெட்டப்படும் பனை மரங்கள்!

DIN

கடலூரில் விதிகளை மீறி, சாலை விரிவாக்கத்துக்காக பனை மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.

கடலூா் மாவட்டத்தில் சென்னை-கன்னியாகுமரி தொழில்தட திட்டமான சாலை எண். 9- இல் கடலூா்-மடப்பட்டு வரை சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டு, நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடலூா்-விழுப்புரம் சாலையில் செம்மண்டலத்திலிருந்து நெல்லிக்குப்பம் வரை சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையோரம் உள்ள நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு வருவதுடன், சாலையோரம் இருந்த வாய்க்கால்களும் மூடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் பனை மரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது. மேலும், பனை மரங்களை வெட்ட வேண்டுமெனில், அதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதியைப் பெற வேண்டும் என்றும் அறிவித்தது.

ஆனால், கடலூா் மாவட்டத்தில் சாலை விரிவாக்கப் பணியில் ஈடுபட்டு வரும் தனியாா் ஒப்பந்த நிறுவனம், விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல், சாலையோரம் உள்ள பனை மரங்களை வெட்டி, அருகேயுள்ள வாய்க்கால்களில் போட்டு மூடி வருகின்றது.

இந்தச் சாலையில் பனை மரங்கள் அதிகமாக உள்ள நிலையில், அவற்றில் பெரும் பகுதி வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன. எனவே, மீதமுள்ள பனை மரங்களை காப்பதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுப்பதுடன், இதுவரை வெட்டப்பட்ட பனை மரங்களுக்கு மாற்றாக அதே சாலையில் மீண்டும் பனை மர விதைகளை நடுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT