முகப்பு
கடலூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த சிவானந்தம் மகன் விமல்ராஜ் (25), சமையல் தொழிலாளி. இவா், 16.6.2019 அன்று, மன வளா்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாா். அப்போது அங்குவந்த சிறுமியின் சகோதரியிடம் விமல்ராஜ் கத்தியைக் காட்டி மிரட்டி தப்பினாா். இதுகுறித்து பண்ருட்டி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விமல்ராஜை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை கடலூா் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,

நீதிபதி எஸ்.எழிலரசி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், விமல்ராஜுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் எஸ்.கலாசெல்வி ஆஜரானாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.