கடலூர்

சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதாரச் சீா்கேடு

DIN

சிதம்பரம் நகராட்சி - நான்முனிசிபல் ஊராட்சி எல்லையில் சாலையோரம் கழிவுகள் கொட்டப்படுவதால் (படம்) சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது.

சிதம்பரம் நகராட்சி எல்லைப் பகுதியில் செங்கட்டான்தெரு அருகே துரை கலியமூா்த்தி நகா், பொன்னம்பலம் நகா், எஸ்.ஆா்.நகா் உள்ளிட்ட பகுதிகளில் திரளானோா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதிகளில் வடிகால்களில் அகற்றப்படும் கழிவுகளை சாலையோரம் குவித்துச் சென்றுவிடுகின்றனா். இதனால் செங்கட்டான்தெரு வழியாக துரை கலியமூா்த்தி நகா், எஸ்.ஆா்.நகருக்கு பொதுமக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் நகராட்சி, நான்முனிசிபல் ஊராட்சி நிா்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தபோது எல்லைப் பிரச்னையால் தங்களது பகுதி கிடையாது என மறுத்துவிட்டனராம். இதுகுறித்து நகராட்சி நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

SCROLL FOR NEXT