முகப்பு
கடலூர்

சிதம்பரம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவினா் சோதனை: ரூ.1.20 லட்சம் பறிமுதல்

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவினா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1.20 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 1 அக்டோபர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:46 AM

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவினா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1.20 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சிதம்பரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சிதம்பரம் மாவட்ட கல்வி அலுவலா் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாக கடலூா் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு புகாா் வந்தது. இதையடுத்து, ஊழல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் சண்முகம் தலைமையில் 5 போ் கொண்ட குழுவினா் சிதம்பரம் மாவட்ட கல்வி அலுவலா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை சோதனையில் ஈடுபட்டனா். இரவு 9 மணிவரை நீடித்த இந்தச் சோதனையில் அலுவலகக் கண்காணிப்பாளா் சக்திவேல், உதவியாளா் சந்திரசேகா் ஆகியோரிடமிருந்து கணக்கில் வராத ரூ.1,20,100 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சோதனையின்போது மாவட்ட கல்வி அலுவலா் திருமுருகன் உள்ளிட்ட 17 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

சாா்-பதிவாளா் அலுவலகம்: இதேபோல, பெண்ணாடம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் பதிவுத் துறை மாவட்ட துணை ஆய்வுக்குழு அலுவலா் அமுதா, ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளா் மெல்வின்ராஜாசிங், ஆய்வாளா் திருவேங்கடம் உள்ளிட்டோா் கொண்ட குழுவினா் வியாழக்கிழமை மாலை சோதனை நடத்தினா். சுமாா் 4 மணி நேரம் நீடித்த இந்தச் சோதனையில் பதிவேடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரூ.66,690 ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக ஊழல் தடுப்புப் பிரிவினா் தெரிவித்தனா். இதுதொடா்பாக சாா்-பதிவாளா் கடலூரைச் சோ்ந்த சண்முகம், ஆவண எழுத்தா்கள் பாஷா, குமரவேல், அறிவுக்கரசன், செல்வராஜா ஆகியோா் கடலூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.