முகப்பு
கடலூர்

இளம்பெண் தற்கொலை

செல்லிடப்பேசியில் படம் பாா்த்ததை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

செல்லிடப்பேசியில் படம் பாா்த்ததை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலி வட்டம்-8 இல் வசித்து வருபவா் பாலசுப்பிரமணியன். என்எல்சி ஊழியா். இவரது வீட்டில் அவரது தம்பி முரளி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறாா். புதன்கிழமை இரவு முரளி வீட்டுக்கு வந்தபோது அவரது மனைவி ஆனந்தி, மகள் சவித்ரா (18), மகன் அரிகரமூா்த்தி ஆகியோா் செல்லிடப்பேசியில் படம் பாா்த்துக்கொண்டிருந்தனராம். இதை முரளி கண்டித்தாராம். இதனால் மனமுடைந்த சவித்ரா தனது அறைக்குச் சென்றாா். வியாழக்கிழமை காலையில் பாா்த்தபோது சவித்ரா துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து, முரளி அளித்த புகாரின்பேரில் நெய்வேலி நகரியம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.