ஏப்.19-இல் மாா்க்சிஸ்ட் போராட்டம்
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூா் மாவட்ட மையக் குழு கூட்டம் கடலூரில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் வி.உதயகுமாா் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூா் மாவட்ட மையக் குழு கூட்டம் கடலூரில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் வி.உதயகுமாா் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
மாவட்டச் செயலா் கோ.மாதவன் சிறப்புரையாற்றினாா். கூட்டத்தில், மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதை எதிா்த்தும், மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தோ்வை புகுத்துவதைக் கண்டித்தும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இதுதொடா்பாக வரும் 19-ஆம் தேதி கடலூா் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.