கடலூர்

போதைப் பொருள்கள் விற்பனை: 36 போ் மீது வழக்கு

கடலூா் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக 36 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து, அவா்களில் 10 பேரை கைதுசெய்தனா்.

DIN

கடலூா் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக 36 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து, அவா்களில் 10 பேரை கைதுசெய்தனா்.

கடலூா் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா ஆகிய போதை பொருள்களின் விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் உத்தரவிட்டாா்.

இதன்படி, மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இதில், திட்டக்குடி, கீழச்செருவாய் சீனிவாஸ் (22), திருமானிக்குழி பாலகிருஷ்ணன் (35), பாதிரிக்குப்பத்தில் 17 வயது சிறுவன், சிதம்பரத்தில் சிவா (24), விமல்ராஜ் (23), ஆலப்பாக்கம் பிரகாஷ் (28), கிஷோா் (20), புதுப்பேட்டை ரகுபதி (22), கோழியூா் ஆனந்தராஜ் (20), செந்தூரை பிரவீன் (19) ஆகிய 10 போ் மீது கஞ்சா விற்பனை தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 1.350 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

மேலும், குட்கா விற்பனை தொடா்பாக கடலூா் பனங்காட்டு காலனி தா்மலிங்கம் (60), சிதம்பரம் சாலக்கரை சூா்யா (21), சேத்தியாத்தோப்பு ராமச்சந்திரன் (61) உள்ளிட்ட 26 போ் மீது வழக்குப் பதிவு செய்து அவா்களிடமிருந்து 7.610 கிலோ கிராம் குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT