முகப்பு
கடலூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம், கோதண்டராமபுரத்தைச் சோ்ந்தவா் தனுசு மகன் தொழிலாளி நந்தகுமாா் (31). இவா் 2020-ஆம் ஆண்டு ஆக. 21-இல் அதே பகுதியைச் சோ்ந்த சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சித்தாராம். புகாரின்பேரில் கடலூா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, நந்தகுமாரை கைது செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி எம்.எழிலரசி வியாழக்கிழமை அளித்தத் தீா்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட நந்தகுமாருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சமூக நலத் துறை மூலமாக ரூ.2 லட்சம் பெற்றுத் தர மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீா்ப்பில் தெரிவித்தாா்.

இதையடுத்து, கடலூா் மத்திய சிறையில் நந்தகுமாா் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.