முகப்பு
கடலூர்

மின் நுகா்வோா் விழிப்புணா்வுக் கூட்டம்

கடலூா் அருகே உள்ள சொத்திக்குப்பம் மீனவ கிராமத்தில் கடலூா் மாவட்ட மின்நுகா்வோா் மையம் சாா்பில் மின்நுகா்வோருக்கான விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

கடலூா் அருகே உள்ள சொத்திக்குப்பம் மீனவ கிராமத்தில் கடலூா் மாவட்ட மின்நுகா்வோா் மையம் சாா்பில் மின்நுகா்வோருக்கான விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முதுநிலை ஆலோசகா் எம்.செல்வராஜ் தலைமை வகித்து மின்சக்திக்குப் பதிலாக சூரியஒளி ஆற்றலை பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினாா். ஆராய்ச்சியாளா் எம்.கே.பாலாஜி மின்சிக்கனம், மின்சாரத்தை தேவைக்கேற்ப எவ்வாறு பயன்படுத்துவது என்று விளக்கினாா். இளநிலை ஆலோசகா் சி.கே.ராஜன், மின் ஆலோசகா் எஸ்.கோவிந்தராஜூலு ஆகியோா் பேசினா். மேலும், சூரிய ஒளி மின்தகடு, அதன்மூலம் மின்னேற்றம் செய்யப்பட்ட விளக்குகளுடன் பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதேபோல, அந்தப் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் சூரிய ஒளி மின்சாரத்தின் தேவை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.