முகப்பு
கடலூர்

ஆசிரியா் கூட்டணி ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் கடலூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் கடலூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாநிலம் முழுவதும் ஆசிரியா் பொது மாறுதல் கலந்தாய்வில் குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும், பொது மாறுதலில் காலி இடங்களை திட்டமிட்டு மறைப்பது, தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் அத்துமீறல், அதிகார துஷ்பிரயோகத்தின் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் மேற்கூறிய ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் இரா.அறிவழகன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சிற்றரசன் கோரிக்கை விளக்க உரையாற்றினாா். மாநிலச் செயலா் ஜோ.கிறிஸ்டோபா் சிறப்புரையாற்றினாா். மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கழகம் நிா்வாகி காளமேகம் வாழ்த்திப் பேசினாா். மாவட்ட துணைத் தலைவா் வெங்கடாசலம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.