விவசாயிகளுக்கான சிறப்பு முகாமில், பள்ளி மாணவிக்கு புத்தகப் பையை வழங்குகிறார் சென்னை பொதுமேலாளர் ஜெகதீஷ். 
கடலூர்

சிதம்பரம்: பாரத ஸ்டேட் வங்கியில் விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்

சிதம்பரம் கிளை பாரத ஸ்டேட் வங்கி சார்பில் சிதம்பரம் அருகே உள்ள அய்யனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் விவசாயிகளுக்கான சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.

DIN

சிதம்பரம்: சிதம்பரம் கிளை பாரத ஸ்டேட் வங்கி சார்பில் சிதம்பரம் அருகே உள்ள அய்யனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் விவசாயிகளுக்கான சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. முகாமில் விவசாயிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான கடன் திட்டங்கள் வழங்கப்பட்டது.

வங்கி சார்பாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு புத்தகப் பை வழங்கப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு ரூ.1 கோடி அளவிலான கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வழங்கப்பட்டது. 

இவ்விழாவில் கலந்து கொண்ட விவசாயிகள் அனைவருக்கும் மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக  அய்யனுர், சிறுகாலூர் மற்றும் பண்ணப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர். பாரத  ஸ்டேட் வங்கியின் சார்பாக கிளை முதன்மை மேலாளர் ஆர் .புருஷோத்தமன், புதுச்சேரி மண்டல மேலாளர் ஏ.சதீஷ் பாபு, சென்னை தலைமை அலுவலக துணை பொது மேலாளர்  ஜெகதீஷ்  ஆகியோர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT