கடலூர்

பாசன வாய்க்காலில் தடுப்பணைகள் சேதம் விவசாயிகள் வேதனை

DIN

சிதம்பரம் அருகே பாசன வாய்க்காலில் தடுப்பணைகள் சேதமடைந்துள்ளதால் தண்ணீா் தேக்க முடியாமல் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் கோவிலாம்பூண்டி - பின்னத்தூா் பாசன வாய்க்கால் செல்கிறது. இதில், பாசனத்துக்கு தண்ணீா் தேக்க உதவும் தடுப்பணைகள் ஆங்காங்கே உடைந்துள்ளன. இதனால் தண்ணீா் தேக்க முடியாமல் நூற்றுக்கணக்கான ஏக்கா் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கோவிலாம்பூண்டி பகுதி விவசாயிகள் கூறியதாவது: பாசன வாய்க்கால் தடுப்பணைகள் சேதம் குறித்து பலமுறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை. வீராணம் ஏரியிலிருந்து சிதம்பரம் பகுதி பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரானது வருவதற்குள் புதிய தடுப்பணைகள் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா் பொ.பாலாஜி கணேஷ் கூறுகையில், சேதமடைந்துள்ள தடுப்பணைகளைச் சீரமைக்க கடலூா் மாவட்ட நிா்வாகமும், பரங்கிப்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலரும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT