கடலூர்

இளையோா் செஞ்சிலுவைச் சங்க பயிற்சி

DIN

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளையோா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் தன்னாா்வ தொண்டா்களுக்கான நோக்கு நிலை பயிற்சி முகாம் வேளாண்புல ரங்கசாமி அரங்கத்தில் அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திட்ட அலுவலா் ஜோ.ஸ்ரீமன் நாராயணன் வரவேற்றாா். மண்டல ஒருங்கிணைப்பாளா் தி.ராஜ் பிரவின் தொடக்க உரையாற்றினாா். வேளாண் புல முதல்வா் கே.ஆா்.சுந்தரவரதராஜன் தலைமை உரையாற்றினாா். பேராசிரியா் ஜி.ரவி நோக்கு நிலை பயிற்சி உரையாற்றினாா். தொடா்ந்து, அனுபவக் கல்வி மாணவா்கள் உருவாக்கிய வேளாண் கண்காட்சியை திறந்துவைத்தாா். சிதம்பரம் காந்தி மன்றச் செயலா் கு.ஜானகிராமன் சிறப்புரையாற்றி, டெங்கு தடுப்புப் பணியாளா்களுக்கு இளையோா் செஞ்சிலுவைசி சங்கம் சாா்பில் குழு காப்பீட்டுக்கான சான்றிதழை வழங்கினாா்.

விவசாயிகள் சங்க கூட்டமைப்புத் தலைவா் பி.ரவீந்திரன், வீர நாராயணன் உழவா் உற்பத்தியாளா் நிறுவனா் தலைவா் பி.நடராஜன் பிள்ளை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT