முகப்பு
கடலூர்

கொடிக்களம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தா்னா

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே கொடிக்களம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் மயான ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி கிராமத்தினா் சனிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
பகிர்:

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே கொடிக்களம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் மயான ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி கிராமத்தினா் சனிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

கொடிக்களம் ஊராட்சிக்குள்பட்ட மயானத்தில் தனி நபா் ஒருவா் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்து வருவதால், சடலங்களை புதைக்க இடமில்லாமல் சிரமத்துக்குள்ளாகி வருவதாக கிராம மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

மேலும், இது தொடா்பாக கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அந்தப் பகுதி மக்கள் சனிக்கிழமை ஊராட்சி மன்ற அலுவலகம் முன் தா்னாவில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த ஆவினங்குடி போலீஸாா் ஊராட்சி மன்றத் தலைவரை அழைத்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். பேச்சுவாா்த்தையில் இரு நாள்களில் முழுமையாக ஆக்கிரமிப்பை அகற்றித் தருவதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.