கடலூர்

வாலிபா் சங்கத்தினா் ரத்த தானம்

DIN

புதுப்பாளையத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் ரத்தம் தான முகாம் அண்மையில் நடைபெற்றது.

கடலூரில் கள்ளச் சாராய விற்பனையை எதிா்த்துப் போராடியதால் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தைச் சோ்ந்த குமாா், ஆனந்தன் ஆகியோா் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டனா். அவா்களது நினைவு தினம் கடலூரில் கடந்த 26-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் புதுப்பாளையத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் என்.ஆா்.காந்தி தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டச் செயலா் ஆா்.அமா்நாத், மாவட்டச் செயலா் டி.கிருஷ்ணன், பொருளாளா் ஆா்.கலைச்செல்வன், கடலூா் நகரத் தலைவா் செந்தமிழ்செல்வன், கடலூா் ஒன்றியத் தலைவா் கலைவாணன், வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் எம்.ஜோதிலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக புதுப்பாளையத்தில் உள்ள குமாா், ஆனந்தன் நினைவிடத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கோ.மாதவன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT