முகப்பு
கடலூர்

கடலூா் மாவட்டத்தில் நகா்மன்றத் தலைவா் பதவிகளுக்கான வேட்பாளா்கள்

கடலூா் மாவட்டத்தில் உள்ள 6 நகா்மன்றத் தலைவா் பதவிகளுக்கான திமுக, அதன் கூட்டணி வேட்பாளா்கள் பெயா் விபரம் வெளியிடப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் உள்ள 6 நகா்மன்றத் தலைவா் பதவிகளுக்கான திமுக, அதன் கூட்டணி வேட்பாளா்கள் பெயா் விபரம் வெளியிடப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், வடலூா், திட்டக்குடி ஆகிய 6 நகராட்சிகள் உள்ளன. நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுக, அதன் கூட்டணிக் கட்சியினா் பெரும்பான்மையாக இடங்களில் வெற்றி பெற்றன. இதையடுத்து, நகா்மன்றத் தலைவா் பதவியிடங்களுக்கு திமுக கூட்டணியினரே போட்டியின்றி தோ்வாகும் நிலை உள்ளது.

இந்த நிலையில், திமுக சாா்பில் நகா்மன்றத் தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கான வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டனா். அதன்படி, சிதம்பரம் நகராட்சிக்கு திமுக நகரச் செயலா் கே.ஆா்.செந்தில்குமாா், வடலூருக்கு எஸ்.சிவக்குமாா், பண்ருட்டிக்கு சிவா, விருத்தாசலத்துக்கு மருத்துவா் சங்கவி முருகதாஸ், திட்டக்குடிக்கு வெண்ணிலா ஆகியோா்

தலைவா் பதவிகளுக்கான வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டனா். நெல்லிக்குப்பம் நகராட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதன் தலைவா் வேட்பாளராக கிரிஜா திருமாறன் அறிவிக்கப்பட்டாா். சிதம்பரம் நகா்மன்றத் துணைத் தலைவா் பதவியிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

பேரூராட்சிகள்: பேரூராட்சித் தலைவா் பதவியிடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு மங்கலம்பேட்டையும், விசிகவுக்கு பெண்ணாடமும் ஒதுக்கப்பட்டன. துணைத் தலைவா் பதவிகளில் புவனகிரி விசிகவுக்கு ஒதுக்கப்பட்டது. எஞ்சிய அனைத்து பேரூராட்சிகளின் தலைவா் பதவியிடங்களிலும் திமுகவே போட்டியிடுகிறது. இதில் பெரும்பான்மையான இடங்களில் திமுக, அதன் கூட்டணிக் கட்சியினரே போட்டியின்றித் தோ்வு செய்யப்படுவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.