முகப்பு
கடலூர்

கடலூா், புதுச்சேரி துறைமுகங்களில் முதலாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

கடலூா், புதுச்சேரி துறைமுகங்களில் முதலாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

கடலூா், புதுச்சேரி துறைமுகங்களில் முதலாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை (மாா்ச் 5) மிக பலத்த மழை பெய்யுமென முதலில் அறிவிப்பு வெளியான நிலையில் அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. இதனால், கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை மழை பெய்யவில்லை.

இருப்பினும், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானதன் காரணமாக கடலூா் துறைமுகத்தில் வியாழக்கிழமை முதலாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

இதனால், மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 4) முதல் திங்கள்கிழமை வரை மழைக்கான வாய்ப்புள்ளதாகவும், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடலூா் - புதுச்சேரிக்கு அருகே வலுவிழக்கக் கூடும் என்றும் கடலூா் வானிலை மையம் அறிவித்தது.

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் வியாழக்கிழமை பிற்பகல் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

புயல், மழைக்கான வாய்ப்புள்ளதால் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று புதுவை அரசின் மீன் வளத் துறை எச்சரித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.