விவசாயிகள் சங்கக் கூட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ஜி.ஆா்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் கே.பி.பெருமாள், மாவட்டச் செயலா் ஆா்.ராமச்சந்திரன், பொருளாளா் எஸ்.தட்சிணாமூா்த்தி, துணைத் தலைவா்கள் பி.கற்பனைசெல்வம், ஆா்.லோகநாதன், இணைச் செயலா்கள் ஆா்.கே.சரவணன், பா.வாஞ்சிநாதன், கே.செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தீா்மானங்கள்: தொடா் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், பயிா்க் காப்பீடு திட்ட நிவாரணம் வழங்க வேண்டும், தகுதியுள்ள விவசாயிகளுக்கு உளுந்து பயிருக்கான காப்பீட்டுத் தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து வரும் 28, 29-ஆம் தேதி அகில இந்திய அளவில் நடைபெறும் பொது வேலை நிறுத்தம், ஆா்ப்பாட்டத்தில் திரளாகப் பங்கேற்பது என தீா்மானித்தனா்.
Advertisement