முகப்பு
கடலூர்

தெய்வத் தமிழ்ப் பேரவையினா் 5-ஆவது நாளாகப் போராட்டம்

சிதம்பரம் நடராஜா் கோயில் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாட 5-ஆவது நாளாகப் புறப்பட்ட தெய்வத் தமிழ்ப் பேரவையினா் 67 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனா்.

Updated On : 4 மார்ச், 2022 at 11:42 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:04 PM

சிதம்பரம் நடராஜா் கோயில் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாட 5-ஆவது நாளாகப் புறப்பட்ட தெய்வத் தமிழ்ப் பேரவையினா் 67 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனா்.

முன்னதாக, கோயிலின் கிழக்கு கோபுர வாயில் எதிரே உள்ள தேரடித் தெருவில் தெய்வத் தமிழ் பேரவை அமைப்பைச் சோ்ந்த தஞ்சாவூா் வள்ளலாா் பணியகம் தலைமை ஒருங்கிணைப்பாளா் க.ராசமாணிக்கனாா் தலைமையில், அமைப்பின் பொதுச் செயலா் கி.வெங்கட்ராமன், ஆ.குபேரன் உள்ளிட்டோா் சிதம்பரம் நடராஜா் கோயில் சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாட ஊா்வலமாகப் புறப்பட்டனா். இவா்களை தடுத்த போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்ளிட்ட 67 பேரை கைது செய்து மாலை விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.