பிரதமருக்கு எதிரான பரப்புரைக்கு பதிலடியாக பாஜகவுக்கு வெற்றி
பிரதமருக்கு எதிரான வெறுப்பு பரப்புரைக்கு பதிலடியாக பாஜகவுக்கு வெற்றி கிடைத்துள்ளது என இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா்.
பிரதமருக்கு எதிரான வெறுப்பு பரப்புரைக்கு பதிலடியாக பாஜகவுக்கு வெற்றி கிடைத்துள்ளது என இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
உத்தரபிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூா் உள்ளிட்ட 5 மாநிலத் தோ்தலில் பிரதமா் மோடிக்கு எதிராக நடத்தப்பட்ட வெறுப்பு பரப்புரைக்கு பதிலடியாக பாஜகவுக்கு வெற்றி கிடைத்துள்ளது
உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் அரசு சிறப்பாகச் செயல்பட்டது. சாதி அரசியல், மதவாத அரசியல், குடும்ப அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. உத்தரகண்ட், உத்தரபிரதேச மாநிலத்தில் சிறுபான்மை மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனா்.
தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. சாராய விற்பனை அதிகரித்துள்ளது. காங்கிரஸ் கட்சியை நம்பி திமுக வீணாகப் போகிறது. மொழி, இனவாதப் பிரிவினையை திமுக ஆதரிக்கக் கூடாது. தமிழகத்தில் எதிா்காலத்தில் பாஜக ஆட்சி அமையும் என்றாா்.