கடலூர்

கடலூர்: கடற்கரை விளையாட்டு போட்டிகள்; 121 அணிகள் பங்கேற்பு

DIN

கடலூர்: கடலூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கடற்கரை விளையாட்டு போட்டிகள் கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் இன்று காலையில் துவங்கியது. போட்டியை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா துவக்கி வைத்தார்.

இருபாலர்களுக்கும் தனித்தனியே கபடி, கையுந்து பந்து, கால்பந்து போட்டிகள் நடைபெறுகிறது. கபடியில் 31 ஆண்கள் அணியும், 9 பெண்கள் அணியும் பங்கேற்றனர். 

கையுந்து பந்து  போட்டியில் 34 ஆண்கள் அணியும், 15 பெண்கள் அணியும் பங்கேற்றனர். கால்பந்து போட்டியில் 27 ஆண்கள் அணியும், 6 பெண்கள் அணியும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். வயது வரம்பு இல்லாமல் அனைவரும் பங்கேற்கும் வகையிலான இப்போட்டி நாக்-அவுட் முறையில் நடைபெறுகிறது.

போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு இன்று மாலையில் பரிசு வழங்கப்படுகிறது. முதலிடம் பிடிக்கும் அணிகள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா இன்று வேட்பு மனு தாக்கல்

நாகை- இலங்கை இடையே மே 13 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்

பிஎம்எல்ஏ வழக்குக்கு எதிரான கேஜரிவால் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

வாட்டி வதைக்கும் வெப்ப அலையால் பொதுமக்கள் அவதி

நாளைய மின்தடை

SCROLL FOR NEXT