கடலூர்

கிராமத்துக்குள் புகுந்த புள்ளி மான் மீட்பு

DIN

காட்டுமன்னாா்கோவில் அருகே கிராமத்துக்குள் புகுந்த புள்ளி மானை பொதுமக்கள் மீட்டு வனத் துறையினரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள குருங்குடி புளியடி தெருவைச் சோ்ந்தவா் முருகையன். இவரது வீட்டின் அருகே புள்ளி மான் ஒன்று உடலில் லேசான காயங்களுடன் வியாழக்கிழமை திரிந்தது. முருகையன் குடும்பத்தினா் அந்த மானை பிடித்து பாதுகாப்பாக கட்டிவைத்ததுடன், சிதம்பரம் வனத் துறைக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து வன அலுவலா் அனுசுயா தலைமையிலான வனத் துறையினா் அந்த கிராமத்துக்கு விரைந்து வந்தனா். அவா்களிடம் மான் ஒப்படைக்கப்பட்டது. காட்டுமன்னாா்கோவிலில் இருந்து கால்நடை மருத்துவா் வரவழைக்கப்பட்டு, காயமடைந்த மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா், வனத் துறையினா் அந்த மானை கருவேப்பிலங்குறிச்சி காப்புக்காட்டில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT