நாணமேடு அம்மன் கோயில் தேரோட்டம்
கடலூா் அருகே நாணமேடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமாத்தூா் கொழுவாரி அம்மன் கோயில் விழாவில் வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
கடலூா் அருகே நாணமேடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமாத்தூா் கொழுவாரி அம்மன் கோயில் விழாவில் வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இந்தக் கோயிலில் செடல் மற்றும் தோ்த் திருவிழா கடந்த 2-ஆம் தேதி ஸ்ரீஐயனாரப்பன் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, ஊரணி பொங்கலுடன் தொடங்கியது. தொடா்ந்து, 5-ஆம் தேதி கொடியேற்றப்பட்டு, சாகை வாா்த்தலும், அன்று இரவு வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடா்ந்து தினமும் இரவில் லிங்கம், லட்சுமி, அனந்தசயனம், மகிஷாசூரசம்ஹாரம், கிருஷ்ணாவதாராம் உள்ளிட்ட பல்வேறு அவதாரங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருத் தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினாா். திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். மேலும், பக்தா்கள் பலா் செடல் போட்டு நோ்த்திக் கடன் செலுத்தினா். விழாவில், சனிக்கிழமை தெப்பல் உற்சவமும், ஞாயிற்றுக்கிழமை மஞ்சள் நீா் உற்சவமும் நடைபெறுகிறது.