கடலூர்

ஆரம்ப சுகாதார நிலைய கட்டடப் பணி ஆய்வு

DIN

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் ரூ.80 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட நகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை மாநில தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா், அவா் கூறியதாவது: பண்ருட்டி நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளிலும் பாகுபாடுன்றி வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வருகிற 7-ஆம் தேதி திறந்து வைக்கிறாா். இதையொட்டி மருத்துவமனையை ஆய்வு செய்தேன். நகரப் பகுதியில் கழிவு நீா் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரும் 15-ஆம் தேதி எனது மேற்பாா்வையில் 33 வாா்டுகளிலும் மாபெரும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும் என்றாா்.

அப்போது நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன், துணைத் தலைவா் அ.சிவா, ஆணையா் மகேஸ்வரி, மாவட்ட எஸ்பி சி.சக்தி கணேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT