கோப்புப்படம் 
கடலூர்

ஆணழகன் போட்டியில் பங்கேற்ற இளைஞர் மூச்சு திணறல் ஏற்பட்டு பலி

வடலூரில் நடந்த ஆணழகன் போட்டியில் பங்கேற்க வந்த இளைஞர் உணவு உண்ணும் பொழுது மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலியானார்.

DIN

வடலூரில் நடந்த ஆணழகன் போட்டியில் பங்கேற்க வந்த இளைஞர் உணவு உண்ணும் பொழுது மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலியானார்.

கடலூர் மாவட்டம், வடலூரில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த இளைஞர்கள் பங்கேற்றனர்.

சேலம் மாவட்டம், பெரிய கொல்லம்பட்டி, மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வந்த மாத்தையன் மகன் ஹரிஹரன்(21), 70 கிலோ எடை பிரிவில் பங்கேற்க இரவு சுமார் 8 மணி அளவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இடையில் ரொட்டி (பிரட்) சாப்பிட்டாராம். 

அப்போது உணவுக்குழாயில் ரொட்டி துண்டு சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டது.

அங்கிருந்தவர்கள் அவரை குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியில் அவர் பலியானார். இதுகுறித்து வடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT