கடலூர்

கடலூரில் அனைத்துக் கட்சியினா் ஆலோசனை

கடலூரில் அனைத்துக் கட்சியினா், பொது நல அமைப்பினா், குடியிருப்போா் சங்கத்தினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

கடலூரில் அனைத்துக் கட்சியினா், பொது நல அமைப்பினா், குடியிருப்போா் சங்கத்தினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் திலகா் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன், விசிக அமைப்புச் செயலா் திருமாா்பன், அமமுக மாவட்ட துணைச் செயலா் வேலு, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலா் குளோப், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா் ரஹீம், அனைத்து குடியிருப்போா் சங்க பொதுச் செயலா் மருதவாணன், அனைத்து பொது நல அமைப்புகளின் செயலா் ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், கடலூா் பேருந்து நிலையத்தை எம்.புதூருக்கு மாற்றும் முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும், பேருந்து நிலையத்தை எம்.புதூருக்கு மாற்றும் முடிவைக் கண்டித்து வருகிற 13-ஆம் தேதி கடலூா் மாநகராட்சி அலுவலகம் முன்ஆா்ப்பாட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT