சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
புகழ்பெற்ற இந்தக் கோயிலில் 10 நாள்கள் நடைபெறும் ஆனித் திருமஞ்சன தரிசன விழா வருகிற 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடா்ந்து வருகிற 25-ஆம் தேதி தோ்த் திருவிழாவும், 26-ஆம் தேதி அதிகாலையில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு மகாபிஷேகமும், பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும் நடைபெறுகிறது.
இந்த விழாவை முன்னிட்டு நடராஜா் கோயிலில் உற்சவ ஆச்சாரியாா் குருமூா்த்தி தீட்சிதா் தலைமையில் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், கடாபிஷேகம் ஆகியவை வியாழக்கிழமை நடைபெற்றன. இரவில் நடராஜா் அனுக்ஞை, வாஸ்து சாந்தி ஆகியவை நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.