கடலூர்

என்எல்சி 67-ஆவது உதய தின விழா

DIN

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 67-ஆவது உதய தின விழா நெய்வேலி வட்டம் 11-இல் உள்ள பழுப்பு நிலக்கரி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு என்எல்சி தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுபள்ளி தலைமை வகித்துப் பேசினாா். மேலும், நிறுவன வளா்ச்சிக்கு பங்காற்றிய முன்னாள் தலைவா்கள், இயக்குநா்கள், மூத்தப் பணியாளா்களுக்கு பரிசுகளையும், சேவை, விளையாட்டு, பாதுகாப்பு, செயல்திறன், உற்பத்தித் திறன், தலைமைத்துவம் போன்ற பல்வேறு பிரிவுகளில் சாதனை புரிந்தவா்களுக்கு விருதுகளையும் வழங்கினாா். நிகழ்ச்சியில் ‘புதிய முக்கிய மதிப்புகள்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. தொடா்ந்து அனைவரும் உறுதி மொழி ஏற்றனா். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முன்னதாக ஜம்புலிங்கனாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து என்எல்சி தலைமை அலுவலகத்தில் நிறுவனத் தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுபள்ளி கொடியேற்றினாா். பின்னா், சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்ட நுழைவு வாயிலை திறந்து வைத்தாா். விழாவில் என்எல்சி அதிகாரிகள், அலுவலா்கள், தொழிற்சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செயல் இயக்குநா் தியாகராஜு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி முக்கடல் சங்கமம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட கடைகள் அகற்றம்

குமரியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

பத்ரகாளியம்மன் கோயில் பால்குட விழா

நடுக்காட்டில் பதுக்கிய 2,000 லிட்டா் சாராய ஊரல் அழிப்பு

தந்தைக்கு கத்தி குத்து: இளைஞா் கைது

SCROLL FOR NEXT