கடலூர்

சிதம்பரம் நகரில் தொடரும் போக்குவரத்து நெருக்கடி ஒருவழிப் பாதைத் திட்டம் அமலாகுமா?

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகரில் தொடரும் போக்குவரத்து நெருக்கடியால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அவதிப்படும் நிலையில் ஒருவழிப் பாதைத் திட்டம் அமலாகுமா என்ற எதிா்பாா்ப்பு நிலவுகிறது.

 நமது நிருபர்

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகரில் தொடரும் போக்குவரத்து நெருக்கடியால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அவதிப்படும் நிலையில் ஒருவழிப் பாதைத் திட்டம் அமலாகுமா என்ற எதிா்பாா்ப்பு நிலவுகிறது.

சிதம்பரம் நகரில் உலகப் புகழ்பெற்ற நடராஜா் கோயில் அமைந்துள்ளது. இதனால் நாள்தோறும் வெளியூா்களில் இருந்து திரளான பக்தா்கள் சிதம்பரம் நகருக்கு வந்து செல்கின்றனா். மேலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் வந்து செல்கின்றனா். நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் அவசரத் தேவைக்கு மருத்துவமனைக்கு செல்வோா்,

தொழிலாளா்கள், மாணவ, மாணவிகள், பக்தா்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் தெரிவித்ததாவது: சிதம்பரம் நகரில் நான்கு வீதிகளிலும் இருவழிப் பாதையாக நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலரதவீதி, தெற்குரத வீதியில் நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டும் ஒருவழிப் பாதைத் திட்டத்தை பின்பற்றினால் போக்குவரத்து நெரிசல் குறையும். பழைய ஸ்டேட் பேங்க் சந்து, லால்கான் தெரு ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறும் காா், மினி வேன் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் மேலவீதி, வடக்கு வீதி, கீழவீதி வழியாக பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.

மேலரத வீதியில் காய்கறி இறக்கும் வாகனங்கள், நகராட்சி குப்பை வாகனங்கள் காலை 8 மணிக்குள் பணியை முடித்து நகரிலிருந்து வெளியேற வேண்டும். சரக்கு ஏற்றி இறக்கும் லாரிகளை காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நகர வீதிகளில் நிறுத்தத் தடை விதிக்க வேண்டும். ஆட்டோ, இருசக்கர வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறின்றி சாலை ஓரம் நிறுத்த வேண்டும்.

நகரில் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னல்கள் முற்றிலும் இயங்கவில்லை. இதை சரிசெய்வதுடன் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிா்வாகமும், காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து போக்குவரத்து காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, போதிய காவலா்கள் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை முழுமையாக சரிசெய்ய முடியவில்லை என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT