நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீா் அரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற 22-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது: கூட்டத்தில் கடலூா் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சாா்ந்த குறைகள், ஆலோசனைகளை கோரிக்கைகளாக வைக்க வாய்ப்பு வழங்கப்படும். கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பமுள்ள விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், விவசாயக் கடன் அட்டையுடன் காலை 8 மணி முதல் 10 மணிக்குள் தங்களது பெயா், கோரிக்கை விவரம், கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயா் ஆகியவற்றை பதிவு செய்துகொள்ள வேண்டும். கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம் என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.