முகப்பு
கடலூர்

பிச்சாவரம் அருகே ஆற்றில் விழுந்த கார்: நகைக்கடை உரிமையாளரின் மனைவி பலி

பிச்சாவரம் அருகே ஆற்றில் கார் விழுந்ததில் நகைக்கடை உரிமையாளரின் மனைவி பலியானார். 

கடலூர்

பிச்சாவரம் அருகே ஆற்றில் விழுந்த கார்: நகைக்கடை உரிமையாளரின் மனைவி பலி

பிச்சாவரம் அருகே ஆற்றில் கார் விழுந்ததில் நகைக்கடை உரிமையாளரின் மனைவி பலியானார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 11:48 AM
பகிர்:

பிச்சாவரம் அருகே ஆற்றில் கார் விழுந்ததில் நகைக்கடை உரிமையாளரின் மனைவி பலியானார்.

சிதம்பரத்தில் பிரபல நகைக்கடை நடத்தி வருபவர் மங்கேஷ்குமார். இவரது மனைவி சுபாங்கி(42). இவரது தம்பி நாம்தேவ், சுபாங்கிக்கு திங்கள்கிழமை அதிகாலை கார் ஓட்டுவதற்கு பயிற்சி கொடுத்த போது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து தெற்கு பிச்சாவரம் வடிகால் ஆற்றில் தலைகுப்புற விழுந்தது. 

இதில் நாம்தேவ் காரில் இருந்து குதித்து தப்பித்தார். காருடன் சுபாங்கி மங்கேஷ்குமார் ஆற்றில் சிக்கி பலியானார். தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்பு மீட்டுத் துறையினர் கார் மற்றும் உடலை மீட்டனர். மேலும் உடலை உடற்கூராய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →