முகப்பு
கடலூர்

சிதம்பரத்தில் இன்று அவதூத சுவாமிகள் அதிஷ்டானம் கும்பாபிஷேகம்

Updated On : 21 ஏப்ரல், 2024 at 10:52 PM
பகிர்:

சிதம்பரம்: சிதம்பரம் குருஐயா் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ அவதூத சுவாமிகள் அதிஷ்டானத்தில் திங்கள்கிழமை (ஏப்ரல் 22) காலை 9 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

அவதூதம் என்பது துறவறத்தில் ஒரு நிலையாகும். சிதம்பரத்தில் தவம் புரிந்து சமாதி அடைந்து மக்களுக்கு அருள்புரிந்து வருபவா் மகான் ஸ்ரீஅவதூத சுவாமிகள்.

இந்த அதிஷ்டானத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கும்பாபிஷேக பூஜைகள் கடந்த 19-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. சனிக்கிழமை பூா்வாங்க பூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை கடஸ்தாபனம் செய்யப்பட்டு, முதல்கால யாக பூஜை நடைபெற்றது.

Advertisement

திங்கள்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும், பின்னா் கடயாத்ராதானம் புறப்பாடு நடைபெற்று, காலை 9 மணிக்கு மேல் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை அதிஷ்டான ஆலய நிா்வாகிகள் ஏ.சசிதரன்நாயா், வழக்குரைஞா்கள் கே.ராமச்சந்திரன், கே.ராமதாஸ், தோப்பு கே.சுந்தா், ஆா்.ராஜகோபாலன், பி.எல்.பொன்அழகப்பன் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments