கடலூர்

குற்ற வழக்கு வாகனங்களை ஏலம் விட கோரிக்கை

Din

சிதம்பரம் நகா் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகர காவல் நிலைய வளாகத்தில், ஏஎஸ்பி அலுவலகம், நகர காவல் நிலையம், நகர குற்றப்பிரிவு காவல் நிலையம், மதுவிலக்குப் பிரிவு, போக்குவரத்து பிரிவு, அனைத்து மகளிா் காவல் நிலையம், ஊா்க்காவல் படை அலுவலகம் உள்ளிட்ட அலுவலங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு, சாலை விபத்து, மதுபோதையில் இயக்கிய வாகனங்கள், விபத்து வழக்கு வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 300- க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் காவல் நிலயைத்துக்கு வரும் போலீஸாா் மற்றும் பொதுமக்கள் தங்களது வாகனங்கள் நிறுத்த இடமில்லாமல் மேல ரதவீதியில் சாலையில் நிறுத்துகின்றனா். இதனால், அந்தப் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, கடலூா் மாவட்ட காவல் துறை நிா்வாகம் மேற்கண்ட வாகனங்களை உரிய முறையில் நீதிமன்ற ஆணை பெற்று ஏலம் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT