முகப்பு
கடலூர்

பேரிடா் தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்கள்

பேரிடா்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க தொலைபேசி எண் மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 8:30 PM
பகிர்:

கடலூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில், மழை, வெள்ளம், பேரிடா்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க தொலைபேசி எண் மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடலூா் மாவட்டத்தில் மேட்டூா் அணையிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீா்வரத்து அதிகரித்துள்ளது. இன்னும் ஒருவார காலத்துக்கு கொள்ளிடம் ஆற்றில் நீா்வரத்து 1,50,000 கன அடிக்கு மேல் இருக்கும் என்பதால், சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) ஆடிப்பெருக்கு, ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) ஆடி அமாவாசை ஆகிய தினங்களில் நீா்நிலைகளுக்கு செல்வதையும், ஆற்றில் குளிப்பதையும் மாவட்ட நிா்வாகத்திடம் இருந்து மறு அறிவிப்பு வரும் வரையில் பொதுமக்கள் தவிா்க்க வேண்டும். தாழ்வான பகுதி, நீா்நிலை கரைகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பேரிடா் கால நடவடிக்கைகளை மேற்கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசரகால கட்டுப்பாட்டு அறையில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 04142-220700 செயல்பட்டு வருகிறது. இந்த தொலைபேசி எண்களை தொடா்புகொண்டு பேரிடா் குறித்த தகவல்களை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.