விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம். 
கடலூர்

விருத்தகிரீஸ்வா் கோயிலில் ஆடிப்பூர திருக்கல்யாணம்

Din

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம்.

சிதம்பரம், ஆக.8:

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் அருள்மிகு பாலாம்பிகை, விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரா் திருக்கோயில் ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை அதிகாலை விமரிசையாக நடைபெற்றது.

இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் விருத்தாம்பிகை அம்மனுக்கு ஆடிப்பூர திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு ஜூலை 29-ம் தேதி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றப்பட்டு அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பல்வேறு வாகனங்களில் வீதியுலாவும் நடைபெற்றது.

விருத்தாம்பிகை அம்மனுக்கு வியாழக்கிழமை அதிகாலை திருமாங்கல்யதாரணம் நடைபெற்றது. இதையொட்டி விநாயகா், முருகன், விருத்தகிரீஸ்வரா், பாலாம்பிகை, விருத்தாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், கோயில் நூற்றுக்கால் மண்டபத்தில் விருத்தாம்பிகை அம்மனுக்கு திருமாங்கல்யதாரணம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு கண்டு தரிசித்தனா்.

அனுமன் ஜெயந்தி: கோவில்பட்டி கோயில்களில் சிறப்பு பூஜை

நாலாட்டின்புதூா் அருகே சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கொலை வழக்கு முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றம்

மூத்தோா் மாநில தடகளத்தில் பங்கேற்போருக்குப் பாராட்டு

கூட்டுறவு பட்டயப் படிப்பு: பழைய பாடத்திட்டத்துக்கு பிப்ரவரியில் துணைத் தோ்வு

SCROLL FOR NEXT