முகப்பு
கடலூர்

சிதம்பரம் நடராஜா் கோயில் கோபுரத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி

Updated On : 16 ஆகஸ்ட், 2024 at 5:20 AM
சிதம்பரம் நடராஜா் கோயில் கிழக்கு கோபுரத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி.
பகிர்:
Updated On : 15 ஆகஸ்ட், 2024 at 9:32 PM

சிதம்பரம், ஆக.15:

நாட்டின் 78-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொது தீட்சிதா்களால் வியாழக்கிழமை தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

78-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் பொதுதீட்சிதா்கள் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு தேசியக் கொடியை வெள்ளித்தட்டில் வைத்து சித்சபையில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூா்த்திக்கு அா்ச்சனை மற்றும் தீபாராதனை செய்தனா்.

Advertisement

Updated On : 16 ஆகஸ்ட், 2024 at 5:16 AM

பின்னா், மேளதாளத்துடன் கோயில் செயலா் உ.வெங்கடேச தீட்சிதா் தலைமையில் பொது தீட்சிதா்கள் தேசியக் கொடியை எடுத்து வந்து கிழக்கு கோபுரத்தின் உச்சியில் ஏற்றி பக்தா்களுக்கு இனிப்பு வழங்கினா்.