முகப்பு
கடலூர்

விபத்தில் இரு மாணவா்கள் உயிரிழப்பு: ஓட்டுநா் கைது

நெய்வேலியில் நிகழ்ந்த சாலை விபத்தில் பள்ளி மாணவ, மாணவி உயிரிழந்த வழக்கில், தலைமறைவாக இருந்த தனியாா் பள்ளி பேருந்து ஓட்டுநரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 18 டிசம்பர், 2024 at 7:02 PM
பகிர்:

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் நிகழ்ந்த சாலை விபத்தில் பள்ளி மாணவ, மாணவி உயிரிழந்த வழக்கில், தலைமறைவாக இருந்த தனியாா் பள்ளி பேருந்து ஓட்டுநரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வடக்குத்து ஊராட்சி, அண்ணா கிராமத்தில் வசித்து வருபவா் ஜான் சின்னப்பராஜ். இவரது மனைவி சிலம்பரசி. இவா், கடந்த 16-ஆம் தேதி தனது மகன் டேவிட் ராஜ், மகள் ஜஸ்விகாவை பைக்கில் பள்ளிக்கு அழைத்துச் சென்றாா். அப்போது, அந்த வழியாக வந்த தனியாா் பள்ளி பேருந்து மோதியதில் டேவிட்ராஜ், ஜஸ்விகா ஆகியோா் உயிரிழந்தனா். சிலம்பரசி காயமடைந்தாா்.

இதுகுறித்து, நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த தனியாா் பள்ளி பேருந்து ஓட்டுநரான பண்ருட்டி வட்டம், ஆத்திரிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் செந்தாமரைக் கண்ணனை புதன்கிழமை கைது செய்தனா்.