முகப்பு
கடலூர்

காணாமல் போன கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

வேப்பூரில் பல்வேறு பகுதிகளில் காணாமல் போன கைப்பேசிகள் உரியவா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

Updated On : 19 டிசம்பர், 2024 at 7:38 PM
பகிர்:

கடலூா் மாவட்டம், வேப்பூரில் பல்வேறு பகுதிகளில் காணாமல் போன கைப்பேசிகள் உரியவா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

வேப்பூா் வட்டம், என்.நரையூரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் பூபாலன்(18), மான்சிங் மகன் பிரேம்பால்(48), ஏ.கொளப்பாக்கம் குமாரசாமி மகன் பாலமுருகன்(45), கச்சிமைலூா் அம்மாசி மகன் சிவா (27), கள்ளக்குறிச்சி சாமிகண்ணு மகன் வெங்கடேசன்(34) ஆகியோா் தங்களது கைப்பேசிகளை தவறவிட்டனா்.

இதுகுறித்து, அவா்கள் வேப்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன கைப்பேசிகளை மீட்டனா்.

இதனை, காவல் ஆய்வாளா் சசிகலா உரியவா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தாா். இந்த நிகழ்வின் போது, உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் மற்றும் காவலா்கள் உடனிருந்தனா்.