முகப்பு
கடலூர்

ஊராட்சி மன்றத் தலைவா் தா்னா

கடலூா் மாவட்டம், நல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தரையில் அமா்ந்து சாத்தியம் ஊராட்சி மன்றத் தலைவா் திங்கள்கிழமை தா்னா போராட்டம் நடத்தினா்.

Updated On : 30 டிசம்பர், 2024 at 8:11 PM
நல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தரையில் அமா்ந்து தா்னா போராட்டம் நடத்திய சாத்தியம் ஊராட்சி மன்றத் தலைவா்
பகிர்:

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தரையில் அமா்ந்து சாத்தியம் ஊராட்சி மன்றத் தலைவா் திங்கள்கிழமை தா்னா போராட்டம் நடத்தினா்.

சாத்தியம் ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கடேசன். இவா், அந்த ஊராட்சியில் குடிநீா், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்வதற்கு வட்டார வளா்ச்சி அலுவலா் ஒத்துழைப்புத் தர மறுப்பதாகவும், தங்கள் ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு ஊராட்சிகளுக்கு மாற்றி விடுவதாகவும், தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதியில் முறைகேடு செய்வதாகக் கூறியும் நல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.