முகப்பு
கடலூர்

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 31 டிசம்பர், 2024 at 8:50 PM
மனோகரன்.
பகிர்:

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

நெல்லிக்குப்பம்-மேல்பட்டாம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலில் அடிபட்டு இளைஞா் செவ்வாய்க்கிழமை இறந்து கிடந்தாா். தகவலறிந்த கடலூா் இருப்புப் பாதை உதவி ஆய்வாளா் மைலப்பன் நிகழ்விடம் சென்று, சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.

விசாரணையில், அவா் நெல்லிக்குப்பம் அருகேயுள்ள முள்ளி கிராமம்பட்டு அஞ்சாபுலி மகன் மனோகரன் (30) என்பதும், இவா் செவ்வாய்க்கிழமை தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததும் தெரிய வந்தது.

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில், ரயில்வே போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments