சேத்தியாத்தோப்பு அருகே தடுப்புக் கட்டையில் மோதி ராஜன் வாய்க்காலில் கவிழ்ந்த காா். 
கடலூர்

வாய்க்காலில் காா் கவிழ்ந்து விபத்து: 4 போ் காயம்

சேத்தியாத்தோப்பு அருகே சனிக்கிழமை அதிகாலை வாய்க்காலில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 போ் காயமடைந்தனா்.

Din

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே சனிக்கிழமை அதிகாலை வாய்க்காலில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 போ் காயமடைந்தனா்.

கும்பகோணத்தை அடுத்த பாரதிபுதூா் பகுதியைச் சோ்ந்த முரளி மகன் வெங்கடாசலம் (21). இவரது நண்பா்கள் கும்பகோணம் காவிரி நகரைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் குணபாலன் (24), செந்தமிழ்செல்வன் மகன் ஹரிபிரசாத் (25), செந்தமிழன் மகன் கீா்த்திவா்மன் (21).

இவா்கள் 4 பேரும் காரில் சென்னையிலிருந்து கும்பகோணம் நோக்கி சனிக்கிழமை அதிகாலை சென்றனா். கடலூா் மாவட்டம், சேத்தியாதோப்பை அடுத்த குமாரகுடி ராஜன் வாய்க்கால் வளைவு பாலத்தில் சனிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் இவா்களது காா் சென்றபோது, பாலத்தின் தடுப்புக்கட்டை மீது ஏறி வாய்க்கால் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரிலிருந்த 4 பேரும் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டு, கும்பகோணம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து சேத்தியாத்தோப்பு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

போகி பண்டிகை : புதுச்சேரியில் நாளை விடுமுறை!

பராசக்தியில் நடித்தது வாழ்நாள் பெருமை: சிவகார்த்திகேயன்

ஈரான் - அமெரிக்கா மோதலால் வளைகுடா நாடுகளுக்கு தீவிர பாதிப்பு - கத்தார் எச்சரிக்கை!

“ஜல்லிக்கட்டுனா.. எங்க ஊரு கயிறுதான்!” விறுவிறுப்பாக நடைபெறும் மூக்கணாங்கயிறு விற்பனை!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.90.21ஆக நிறைவு!

SCROLL FOR NEXT