சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் 2024 - 25 ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை பாடப்பரிவுகளுக்கான மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை (ஜூலை 22) தொடங்கி 2 நாள்கள் நடைபெறவுள்ளது.
அதன்படி, திங்கள்கிழமை (ஜூலை 22) காலை 9 மணிக்கு பி.எஸ்சி. கணிதம் - தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி, பி.எஸ்சி. இயற்பியல், பொது வேதியியல், பி.எஸ்சி. கணினி அறிவியல் சுழற்சி - 1, 2, பி.எஸ்சி. புள்ளியியல், பிசிஏ கணினி பயன்பாட்டியல், பி.எஸ்சி. தொழில் வேதியியல் சுழற்சி - 1, 2, பி.எஸ்சி. தாவரவியல் - தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி, பி.எஸ்சி. விலங்கியல் - தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி உள்ளிட்ட பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறும்.
செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) காலை 9 மணிக்கு பி.ஏ. பொருளியல் - தமிழ்வழி மற்றும் ஆங்கிலவழி, பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம் சுழற்சி - 1, 2, பி.காம். சுழற்சி -1, 2, பி.பி.ஏ. வணிக நிா்வாகவியல் ஆகிய பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறும்.
சோ்க்கைக்கு வரும் மாணவ, மாணவிகள் இணையவழி விண்ணப்பம், பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10, 11, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதாா் அட்டை, வங்கி சேமிப்பு கணக்குப் புத்தகம், மாா்பளவு புகைப்படம் மற்றும் இதர சான்றிதழ்களின் அசல், நகல்களுடன் வர வேண்டும்.