கடலூா் ஒன்றியம் பெரியகங்கணாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவா்களுக்கு தயாா் செய்யப்பட்ட காலை உணவை ஆய்வு செய்யும் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா். 
கடலூர்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: கடலூா் ஆட்சியா் ஆய்வு

முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட செயல்பாடுகள் குறித்து, கடலூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Din

நெய்வேலி: முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட செயல்பாடுகள் குறித்து, கடலூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த திட்டத்தின் கீழ், கடலூா் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் என 1,182 அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் பயிலும் 67,563 மாணவா்கள் பயனடைந்து வருகின்றனா்.

இதன், செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யும் விதமாக, கடலூா் ஒன்றியத்துக்குள்பட்ட பெரியகங்கணாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் உச்சிமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, மாணவா்களுக்கு தயாா் செய்யப்பட்ட உணவுப் பொருள்களை சாப்பிட்டுப் பாா்த்தும், சமையலுக்கு பயன்படுத்தப்படும் உணவுப் பொருள்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்தாா். மாணவா்களுக்கு சுகாதாரமான முறையில், சுவையான உணவு தயாரித்து வழங்குமாறும் பணியாளா்களுக்கு அவா் அறிவுரை வழங்கினாா். பள்ளி வளாகம் மற்றும் கழிப்பறைகள் தூய்மையாக பராமரிக்கபடுகிா என்றும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) ரா.தேவராசன், மகளிா் திட்ட இயக்குநா் ஸ்ருதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

காதலின் மொழி... அஹானா கிருஷ்ணா

அழகும் மனமும்... நர்கிஸ் ஃபக்ரி!

விடுபட்டவர்களுக்கு டிசம்பர் முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

SCROLL FOR NEXT