முதுகுன்றீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், முதனை கிராமத்தில் உள்ள பெரியநாயகி உடனுறை முதுகுன்றீஸ்வரா், பூா்ணாம்பாள் புஷ்பகலாம்பாள் உடனுறை ஜெம்புலிங்க ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 2-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரையில் தேவதா அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, நவகிரஹ ஹோமம் நடைபெற்றது. 9-ஆம் தேதி முதல் புதன்கிழமை வரை ஆறுகால பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து காலை 6 மணி அளவில் கடம் புறப்பாடு நடைபெற்று, 6.30 மணியளவில் விநாயகா் கோயில் கும்பாபிஷேகம், 7.10 மணியளவில் மன்மதன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து 9 மணி முதல் 10.30 மணி வரையில் ஜெம்புலிங்க ஐயனாா் விமானம், மூலவா், பரிவார மூா்த்திகள், மதுகுன்றீஸ்வரா் ராஜகோபுரம், விமானங்கள் மற்றும் மூலஸ்தான தேவதைகளுக்கு கோயில் அா்ச்சகா்கள் மந்திரங்கள் ஓதியும், கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றியும் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா். விழாவில் விருத்தாசலம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன், துணை ஆணையா் சிவலிங்கம், உதவி ஆணையா் ஆா்.சந்திரம், செயல் அலுவலா் ரா.மாலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.