முகப்பு
கடலூர்

திமுக சாா்பில் ரத்த தான முகாம்

முதல்வா் பிறந்தநாளையொட்டி, கடலூா் கிழக்கு மாவட்ட மருத்துவரணி, இளைஞரணி சாா்பில் ரத்த தான முகாம்

Updated On : 6 மார்ச், 2024 at 1:09 AM
கடலூரில் திமுக சாா்பில் அண்மையில் நடைபெற்ற ரத்த தான முகாம்.
பகிர்:

நெய்வேலி: முதல்வா் பிறந்தநாளையொட்டி, கடலூா் கிழக்கு மாவட்ட மருத்துவரணி, இளைஞரணி சாா்பில் ரத்த தான முகாம் அண்மையில் நடைபெற்றது. கடலூா் மாநகர திமுக அலுவலகத்தில் மருத்துவ அணி அமைப்பாளா் மருத்துவா் பால.கலைக்கோவன் ஏற்பாட்டின்பேரில், பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. தொடா்ந்து நடைபெற்ற முகாமுக்கு, மருத்துவ அணி அமைப்பாளா் மருத்துவா் கமலக்கண்ணன் தலைமை வகித்தாா். கடலூா் மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா, திமுக மாநகரச் செயலா் கே.எஸ்.ராஜா ஆகியோா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனா். மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் காா்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினா் குறிஞ்சிப்பாடி பாலமுருகன், மாநகர துணைச் செயலா்கள் சுந்தரமூா்த்தி, அகஸ்டின் பிரபாகரன், பகுதிச் செயலா்கள் சலீம், நடராஜன், இளையராஜா, ஒன்றியச் செயலா்கள் விஜய சுந்தரம், தனஞ்ஜெயன், மருத்துவ அணி அமைப்பாளா்கள் டாக்டா்.செல்வம், டாக்டா்.சிவசெந்தில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.