முகப்பு
கடலூர்

கடலூா் கடற்கரையில் தூய்மைப் பணி

Updated On : 9 மார்ச், 2024 at 12:22 AM
பகிர்:

சா்வதேச கடற்கரை தூய்மை தினத்தையொட்டி, மத்திய கடல் பொருள்கள் ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு ஆணையம் சாா்பில், கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் வெள்ளிக்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது. மத்திய கடல் பொருள்கள் ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு ஆணைய இணை இயக்குநா் அன்சா் அலி தலைமை வகித்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா் அருள்மூா்த்தி முன்னிலை வகித்தாா். பேராசிரியை சிவகாமசுந்தரி நெகிழிப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கிக் கூறினாா். தொடா்ந்து, கல்லூரி மாணவா்கள் கடலூா் வெள்ளிக்கடற்கரையில் குப்பைகளை சேகரித்து தூய்மைப் பணியில் ஈடுபட்டனா். நிகழ்ச்சியில் கடலூா் மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை ஆய்வாளா் ராமன், கடலோர காவல் படை அதிகாரிகள், கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.